இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்று என்பத்தொன்பது வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (6) பூசா கடற்படை கப்பல் நிபுன வில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.  இந்நிகழ்விற்கு கடற்படை பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (கடல் மற்றும் வான் செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.         

மஹா சங்கத்தினர், ஏனைய மத குருவினர், தெற்கு கடற்படை கட்டளை பிரதேச தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன, பிரதித்  தளபதியும் மற்றும் கடற்படை கப்பல் நிபுன கட்டளைத் தளபதி கொமொடோர் நிலந்த ஹீனடிகல உட்பட முப்படை அதிகாரிகளும்  பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில்  கலந்துக்கொண்டனர்.      

பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. இ எச் எம் சில்வா சிறந்த  பயிட்சியாளருக்கான விருதையும் சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதையும் பெற்றார். டப் எச் எம் டி டி ஹேரத் சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் ஜெ சீசா சிறந்த விளையாட்டு போட்டியாளருக்கான விருதையும் வென்றனர். சிறந்த பிரிவுக்கான விருதை நிலவலா பிரிவு வென்றது.

ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி அவர்கள் உரையாற்றுகையில் 2500 வருடங்களுக்கும் விட பழமைவாய்ந்த இலங்கையின் வரலாற்றை நினைவுபடுத்தி கடந்த காலங்களில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள், உள்நாட்டு குழப்பங்கள்  உட்பட 30 வருட பயங்கரவாத  சவால்களை எவ்வாறு நாம் முகம் கொடுத்தோம் என்பதை பற்றி எடுத்துரைத்தார். பயிற்சியாளர்களை விளித்து அவர், நாட்டின் நலனையும், வென்றெடுத்த சமாதானத்தையும் நாட்டின் எதிகால சந்ததியினரின் நலனுக்காக பேன வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கடற்படையில் இணையக்கிடைத்த சந்தர்ப்பத்திற்காக  பெருமை கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.   
     
மேலும் கடற்படையின் பாரம்பரியங்களை பேனும் அதே வேளை பயிற்சியின் போது பெற்ற அறிவு மற்றும் திறனை எதிர்கால பணிகளின்போது செவ்வனே நிறைவேற்ற வேண்டுமேனவும் தாய்நாட்டிற்கான தம் பணியின்போது கடற்படையின் நன்மதிப்பை பேணும் வகையில் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களிடம் அவர்களை கடற்படையில் இணைய அனுமதித்தமைக்காக நன்றியினை கடற்படை தளபதியின் சார்பில் தெரிவித்துக்கொண்டார்.