கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் செயல்பாட்டு தயார் நிலை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஆயுமுகமாக  நேற்று (6) அங்கு விஜமொன்றை மேற்கொண்டார். அங்கு வருகை தந்த அவரை  வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றார். தலைமையக மற்றும் வடக்கு பிராந்திய அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கடற்படை தளபதியுடன் இனைந்துகொண்டனர்.

இவ்விஜயத்தின் போது  வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நைனாதீவு ரஜமகா விகாரைக்கும், கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கும் சென்று ஆசிபெற்றார். அதன் பின் வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தில் உள்ள பல கடற்படை முகாம்களுக்கு சென்ற கடற்படை தளபதி அங்கு அதிகாரிகளையும் வீரர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தினார். இதன்போது இராணுவ மற்றும் தேசிய இலக்குகளை அடையும் அதேநேரம் பொதுமக்களுடனான நல்லுறவை பேனும் வகையில் கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சேவைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறித்தினார். கடலிலும் தரையிலும் செயல்பாட்டு தயார் நிலையை பேணி கொடுக்கப்பட்ட பணிகளை செய்துமுடிக்க அர்பணிப்புடன் சேவையிலீடுபடும் கடற்படையினரின் சேவையை அவர் மெச்சினார்.