பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’ திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’, திருகோணமலை துறைமுகத்தை இன்று காலை (ஆகஸ்ட் 15) வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாய முறைப்படி இலங்கை கடற்படையால் வரவேற்பளிக்கப்பட்டது.

வருகை தந்த கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் ஸ்டெபான் குகேஸ், கிழக்கு கடற்படை பிரதேசத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களை கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்குமிடையிளான சுமூக கலந்துரையாடலின் போது கிழக்கு கடற்படை பிரதேசத்தின் பிரதி கட்டளை அதிகாரி கொமொடோர் மெரில் சுதர்ஷன உட்பட மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தை யொட்டி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன. இம்மாதம் 18ம் திகதி வரை இலங்கையில் இக்கப்பல் தரித்திருக்கும் அதே வேளை அதன் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும் உள்ளனர்.