சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 18 நபர்கள் கடற்படையால் கைது
 

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 18 பேர், மட்டக்கிளப்பிற்கு 40 கடல் மைல்களுக்கப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இச்சட்ட விரோத குடியேறிகள் “ப்ளுஸ்டார்” எனும் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றின் மூலம் வாளைச்சேனை பகுதியிலிருந்து அவுஸ்திரேலிய நாட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சந்தேக நபர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இச்சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கடல்சார் பிரிவிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

ஆட்கடத்தல் காரர்களின் பொய்யான தகவல்களை நம்பி பாதுகாப்பற்ற கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க வேண்டாம் எனவும் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் இறுதியில் சிறையில் முற்றுப் பெறுகின்றன எனவும் கடற்படை எச்சரிக்கின்றது. இவ்வாறான சட்டவிரோத பயணங்களை ஆரம்ப கட்டத்திலேயே முறியடிகுமுகமாக கடற்படையினர் பரந்த புலனாய்வு தகவல் வலையமைப்பினையும் கடல் ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் கடற்படை மேலும் தெரிவிக்கின்றது.