பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டியில் கடற்படை வெற்றி
 

விளையாட்டு அமைச்சு ஹொக்கி மைதானத்தில் கடந்த 9 தொடக்கம் 12ஆம் (ஆகஸ்ட் 2016) திகதி வரை 9ஆம் முறையாக நடந்தப்பட்ட பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித் தொடரில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சரித்திரத்தில் முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளதன.

இலங்கை கடற்படை மற்றும் இராணுவ அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இராணுவ அணியை 1-0 எனும் அடிப்படையில் கடற்படை அணி வெற்றிகொண்டது. கடற்படை அணியின் தலைவர் ஆர் எம் எம் டி ரத்னாயக்க கடற்படைக்கான கோளை பெற்றுத்தந்ததுடன், இலங்கை விமானப்படை அணியுடன் நடந்த பெண்களுக்கான போட்டியில் 2-1 என்ற வகையில் கடற்படை பெண்கள் அணியின் வெற்றி ஈட்டியது. கடற்படை அணியின் வீராங்கனை டப் எம் ஸி டி விஜேசூரிய மற்றும் பி என் எம் ஜயநெத்தி தம் அணியிற்காக கோல்களை பெற்றுகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.