முதலாம் நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு
 

மற்றுமொரு சமூக நலன்புரி சேவையாக இலங்கை கடற்படை முதலாம் முறையாக ஒரு நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை ஹம்பேகமுவை பகுதி மக்களின் பாவனைக்காக நேற்று (16 ஆகஸ்ட்) முதல் துவக்கிவைத்தது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அமைக்கப்பட்ட இவ்வியந்திரம் ஹம்பேகமுவை பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 3000 மக்களின் தினசரி குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய உதவும்.

இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் விசேடத்துவமானது ஆறுகள் மற்றும் குளங்களிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்த பின் அதனை கொண்டு சென்று மக்களுக்கு விநியோகிக்க கூடிய அதன் திறனாகும். மேலும் இது 10,000 லீட்டர் நீரை சுத்திகரித்து ஹம்பெகமுவை பிரதேச மக்களின் அன்றாட குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும். தென்கிழக்கு கடற்படை கட்டளை பிரதேச தலைமையகத்தினால் இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் பராமரிப்பு மேட்கொள்ளப்படும்.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசத்தில் கடற்படை தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய மேலும் 5 நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெரும் வாய்ப்பு கிட்டும். இதேவேளை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு தற்சமயம் சூரிய சக்தி இயந்திரம் ஒன்றையும் கடல் நீரை சுத்தப்படுத்தும் உவர் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.