கடற்படையினரால் 26.75 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனியிலுள்ள கடற்படை பிரிவின் வீரர்களால் 13 பொதிகளில் வெவ்வேறாக பொதி செய்யப்பட்டு 26.75 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற மூவர் சம்பியன்பத்து பிரதேசத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கஞ்சாவும் மரதங்கேணி பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.