கடற்படையினரால் 4 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படை புலனாய்வு குழுவினரால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் ஊர்காவற்துறையி, கடற்படை கப்பல் கஞ்சதேவ மற்றும் மண்டை தீவு கடற்படை கப்பல் வேலுசுமன வின் கடற்படை வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 18) திருநெல்வேளிப் பகுதியில் வைத்து 4 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் பருத்தித்துறை மதுவரி அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரும் கஞ்சாவும் மதுவரி அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.