இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரஜேந்திர சிங் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (19) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். வருகை தந்த இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடற்படை மரியாதை அணிவகுப்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை சிறப்பித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கடற்படைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படையின் பணிப்பாளரி நாயகங்கள், கடற்படை தலைமையாக சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இலங்கைகான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகபகாப்பு ஆலோசகர், கெப்டன் பிரகாஷ் கோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.