இரண்டாம் கட்ட மேற்கு மாகான ரக்பி செவன்ஸ் போட்டிகளில் கடற்படை அணி சாகசம்
 

இலங்கை கடற்படையின் ரக்பி ‘ஏ’ அணி ஹவ்லொக் ‘ஏ ‘ அணியை 32 க்கு 10 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவில் வெற்றி கொண்டு மேற்கு மாகான ரக்பி செவன்ஸ் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது. பொலிஸ் பார்க் மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற இறுதிபோட்டியின் போது இரு அணிகளுக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்பட்டாலும் கடற்படை அணி மிக இலகுவில் வெற்றியை நோக்கிச்சென்றது.

போட்டியின் முதல் பாதியில் 15-5 என்னும் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையிலிருந்த கடற்படை அணி அதன் வெற்றி நடையை போட்டியின் இறுதிவரை (32-10) தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. தினூஷ சதுரங்க, லீ கீகள் மற்றும் நிவங்க பிரசாத் ஆகியோர் கடற்படை அணியின் வெற்றிக்கு மூலகர்த்தாக்களாக அமைந்தனர். தினூஷ சதுரங்க இரு ட்ரைகளை பெற்றாலும் சானக சந்திமால் மூன்று பரிமாற்றங்களையும் பெற தவறிவிட்டார். மொத்தம் 23 அணிகள் இப்போட்டித்தொடரில் கலந்துக்கொண்டன. இதேவேளை கடற்படையின் ‘பீ ‘ அணி சீஎச் & எப்சீ அணியை 29-5 எனும் அடிப்படையில் இரண்டாம் நிலை போட்டிகளில் போது வெற்றிகொண்டது.