அமெரிக்க கடற்படை செயலாளர் திருகோணமலை கடற்படை டொக்யாட் விஜயம்
 

அமெரிக்க கடற்படை செயலாளர் கௌ. ரே மேபஸ் அவர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை கப்பல் திருத்தத்தளத்திற்கு (டோக்யாட்) இன்று (ஆகஸ்ட் 22) விஜயம் செய்தார். இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கிடையிலான கூட்டு பயிற்சி நடவடிக்கைகளை பார்வையிடுவதட்காக வேண்டி அவரின் விஜயம் அமைந்திருந்தது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் வருகை தந்த அமெரிக்க கடற்படை செயலாளரை கடற்படை டோக்யாடில் வைத்து வரவேற்றார்.

திருகோணமலை கடற்படை இல்லத்திள் நடந்த சுமூக கலந்துரையாடலின் போது நடந்துகொண்டிருக்கும் இருதரப்பு பயிற்சி நடவடிக்கைகள் சம்பந்தமாக கருத்துக்கள் பரிமாரிக்கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்திற்கு கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா உட்பட பல உயரதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.