சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளைப் பிரதேசத்திற்கு உரித்தான நிலாவெளி, இலங்கை கடற்படைக கப்பல் விஜயபா வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 22) நிலாவெளி கடற்பகுதியில் தடை செய்யப்பட வலைகளைப் பயபடுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 22 பேரை கைதுசெய்தனர். அவர்களுடன் 5 கண்ணாடி இழைப் படகுகள், 3 மீன்பிடி வலைகள், 3சுழியோடி காலணிகள் மற்றும் 4 சுழியோடி முகமூடிகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட நபர்களும் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.