கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் ஏறம்புகொடெல்ல கரையோர பகுதியில் வைத்து சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றம் செய்துகொண்டிருந்த இரு உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) கைது செய்யப்பட்டார்கள். அவர்களுடன்  770 கிலோ உலர்ந்த கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட நபர்களும் கடலட்டையும் புத்தளம் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.