தாமரை தடாக திரையரங்கில் ‘பிரிநிவன் மங்கல்ய’ பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சி பிரதமர் தலைமையில்
 

இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் இயக்கத்தில் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரிநிவன் மங்கல்ய’ நேற்று மாலை (ஆகஸ்ட் 25) தாமரை தடாகம் திரையரங்கில் வெகு விமர்சையாக மேடையேற்றப்பட்டது. பிரதமர் கௌரவ. ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பின் பேரில், கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ அவர்களின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்நிகழ்ச்சிக்கு கடற்படையின் பணிப்பாளர் இசை கொமொடோர் ஜூட் பீரிஸ் அவர்களின் மேட்பர்வையில் கடற்படை கீழைதேய வாத்திய குழுவின் பொறுப்பதிகாரி கொமாண்டர் எஸ் டி ரூபசின்ஹ வின் தலைமையில் இசை வழங்கப்படது. கடற்படையின் 25 வாத்தியக் கலைஞர்களும் மேலும் 30 கேமதாச மன்ற மற்றும் கடற்படை பாடகர்களும் கலந்துக்கொண்டனர்.

இசை மேதை கேமதாச அவர்களின் புதல்வி காயத்ரி கேமதாச வினால் இசையமைக்கப்பட்ட இந்நிகச்சிக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்ஹ வினால் குரல் மற்றும் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படை இசை குழும உறுப்பினர்களின் கடின உழைப்பினால் உருவான உயர்தரத்திலான இவ்வகை அரிய இசையானது பார்வையாளர்கள், ஒரு வித்தியாமான இசை அனுவத்தை பெற காரணமாக அமைந்தது. இந் நிகழ்வில் மகாநாயக்க தேரர்கள், கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், வெளிநாட்டு தூதுவர்கள், ஏனைய விருந்தினர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் , அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், அங்கவீனமுற்ற படைவீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாலைப் பொழுதினில் நடத்தப்பட்ட இம்மனங்கவர் இசை நிகழ்ச்சி பிரதமர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கலளின் பாராட்டை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகர்களான திருமதி அனோஜா வீரசிங்ஹ மற்றும் ரவீந்திர ரண்தெனிய ஆகியோர் அறிவிப்பாளர்களாக கடமையாற்றினார்.

இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களினால் இயற்றப்பட்ட 'பிரினிவன் மாங்கல்ய' பௌத்த நாடகக் கதைப் பாடல், புத்தபிரானின் இறப்பினை பிரதிபலிக்கும் வகையில் ஜே ஈ சேதாராமநின் ‘பலியக விசாரய’ எனும் கவிதையிலிருந்து கண்டி யுக மரபுக்கு அமைய இயற்றப்பட்டது. மேலும் இது 2007ஆம் ஆண்டு இந்தியாவின் புத்தகயாவில் வெசாக் பௌர்ணமி தினத்திளும் மேடையேற்றப்பட்டது. இறுதியாக இக்கீதம் அவர் இறந்தபோது கேமதாச மன்ற மாணவர்களால் இசைக்கப்பட்டது.