கடற்படை குடும்ப அங்கத்தவர்களுக்கான டென்னிஸ் பயிற்சி பாசறை

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிற்கமைய, கடற்படை குடும்ப அங்கத்தவர்களுக்கிடையே விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் ஒரு, மூன்று நாள் டென்னிஸ் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இம்மாதம் 22ம் , 23ம்  மற்றும்  24ம் தினங்களில், கடற்படை கப்பல் கெமுனு வில் நடத்தப்பட்ட இப்பயிற்சி நிகழ்ச்சியின் போது டென்னிஸ் விளையாட்டு சம்பந்தமான அடிப்படை  அம்சங்கள் பற்றிய அறிவூட்டல் அளிக்கப்பட்டது. 

சர்வதேச டென்னிஸ் கழகத்தின் நிலை 2 தகுதி பெற்ற பயிற்றுவிப்பாலரான திரு. உபுல் பிரியந்த அவர்களினால், இலங்கை கடற்படை டென்னிஸ் அணியின் தலைவர் கப்டன் பிரதீப் கருணாதிலக அவர்களின் மேற்பார்வையின் கீழ்          நடத்தப்பட்ட இப்பட்டறை, கலந்துகொண்ட கடற்படை குடும்ப அங்கத்தவர்களின் விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்ய ஒரு சிறந்த மேடையை அமைந்த கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.