கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு - 2016 போட்டியில் மிதக்கும் கட்டளைக்கு வெற்றி

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு-2016 போட்டி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா வில் ஆகஸ்ட் 25ம் திகதி நடைபேற்றது. இந்நிகல்விட்கு வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். பெருந்திரளான கடற்படை அதிகாரிகளும் வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

அதன் சிறந்த அணிவகுப்பு திறமையால் மிதக்கும் கட்டளை மற்ற அனைத்து கட்டளைகளையும் பின்தள்ளி சம்பியன்ஷிப் விருதை வென்றது. சென்ற வருட வெற்றியாளர்களான பயிற்சி கட்டளை இவ்வருடம் இரண்டாம் இடத்தை பெற்றது. அணிவகுப்பின் சிறந்த கட்டளையாலராக மிதக்கும் கட்டளை அணியின் தலைவர் லெப்டினன்ட் நிரஞ்சன் சிரிமல்வத்த தெரிவு செய்யப்பட்டார்.