கடற்படை டோக்யாடில் புதிதாக நிமானிக்கப்பட்ட ஜெட்டி மற்றும் ஏறி வாயு கொள்கலன் களஞ்சியசாலை திறந்து வைப்பு

திருகோணமலை கடற்படை டோக்யாடில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெட்டி, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களால் 2016 செப்டம்பர் 4ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது. டோக்யாடினுல் பாதுகாப்பாக கப்பல்களை நிறுத்துவதற்கு இப்புதிய ஜெட்டி உதவியாக அமையும். 628 அடி நீளமான இந்த ஜெட்டி, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.

இதேவேளை இடமாற்றப்பட்ட ஏறி வாயு கொள்கலன் களஞ்சியசாளையும் அதே தினம் திறந்து வைக்கப்பட்டது. கடற்படை வீரர்களது பாதுகாப்பை கருதி இடமாற்றப்பட்ட இக்களஞ்சியம் தற்பொழுது வேறு ஒரு பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டடு திட்டங்களினது நிர்மாணிப்பு பணிகள் கடற்படை ஆலனியினால் மேட்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல கடற்படை அதிகாரிகளும் பெருந்திரளான வீரர்களும் இந்நிகழ்களின் போது சமூகமளித்திருந்தனர்.