சம்பத்நுவரவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்துவைப்பு

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் மற்றுமொரு சமூக சேவை நிகழ்ச்சித் திட்டமாகசம்பத்நுவர மகா வித்தியாலயத்தில் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று (செப்டம்பர்.6) திறந்து வைக்கப்பட்டது. நவீன தொழிநுட்பதினூடாக கடற்படை பிரதானி, ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களும் ஒன்லைன் மூலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

கடற்படை தளபதியின் எண்ணக்கருவில், சிறுநீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில், இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபணுத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி 22 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. சம்பத்நுவரவவில் நிறுவப்பட்டுள்ள குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப்பாடசாலையிள் கற்கும் சுமார் 525 பிள்ளைகள். 35 ஆசிரியர்கள் மற்றும் 540 குடும்பங்கள் தூய குடி நீரைப் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படை ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு உயர் தரத்திலான மேலும் பல நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிர்மாணிக்க எண்ணியுள்ளதுடன் நாடலாவ ரீதியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தூய நீரை வழங்கும் வகையில் குறைந்த செலவில் அவ்வியந்திரங்களை நிர்மாணிக்கும். அத்துடன் சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற பிரதேச மாணவர்களின் நன்மை கருதி நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினர் அபிவிருத்தி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவைளை, எதிர்காலத்தில் மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு பதிலாக சூரிய சக்தியன் மூலம் இயங்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகள் இப்பிரிவினரால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய மஹா சங்க உறுப்பினர், வடமத்திய கடற்படைத் கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்கிரமசிங்ஹ, சிரேஷ்ட அதிகாரிகள், வெலி ஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிபர், ஆசிரியர்கள், மற்றும் குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.