போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் தடுப்பு
 

கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் தக்ஷின வின் வீரர்கள், காலி பொலிசாருடன் ஒருங்கிணைந்து காலி கலங்கரை விளக்கை அண்டிய பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு அறையை சோதனையிட்டனர்.

கடந்த செப்டம்பர் 7ம் திகதி (2 0 1 6 ) நடந்த இச் சோதனையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பொருள்களுள் 141 இறப்பர் முத்திரைகள், 1 சாரதி அனுமதி பத்திரம், 2 விவாகச் சான்றிதல்கள், 1 கல்விச் சான்றிதல், 3 காணி பத்திரங்கள், 1 பூர்தி செய்யப்படாத அடையாள அட்டைகள், 31 பிறப்பு சான்றிதல்கள், 7 பாடசாலை விண்ணப்ப படிவங்கள், உறுதிமொழி கடிதங்கள் உட்பட மேலும் பல போலி ஆவணங்களும் அடங்கும். காலி பொலீசார் மேலதிக விசாரணைகளை துவங்கியுள்ளனர்.