கடற்படை தளபதி யாழ்பாணத்தில் மதுசார மற்றும் போதைபொருள் எதிர்ப்பு நிகழ்வில் பங்கேற்பு

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் யாழ்பாணம், துரையப்பா மைதானத்தில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற “மதின் நிதஹஸ் ரட்டக்- போதைபொருள் மற்றும் மதுசாரம் அற்ற ஒரு நாடு” எனும் நிகழ்வின் பிரதம அத்தியாக பங்கேற்று சிறப்பித்தார். இந் நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களும் கலந்துக் கொண்டனர்.

இத் தேசிய நிகழ்ச்சி, இளைய சமுதாயத்தை போதை பொருட்களில் இருந்து பாதுகாக்கும் முகமாக போதை பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கல் எனும் ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கமைய ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வின் போது பிரதேச பாடசாலை மாணவர்கள் தமது நிகழ்ச்சிகளால் சமூகமளித்தோரை மகிழ்வித்தனர். மகா சங்கத்தினர், மத குருக்கள், அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர் உட்பட அதிகளவான பிரதேச மக்களும் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். வட பிரதேசத்தில் போதை பொருள் கடத்தலுக்கெதிரான கடற்படையின் சேவையை பாராட்டி கடற்படை தளபதி, வடக்கு கடற்படை கட்டளை தளபதி மற்றும் புலனாய்வு அதிகாரி (வடக்கு) ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களால் பாராட்டுப் பத்திரமும் இந் நிகழ்வின் போது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.