‘நீர்காகம் தாக்குதல் 2016’ திருகோணமலை டொக்யாடில்

இலங்கை பாதுகாப்பு படைகளின் வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சி, ‘நீர்காகம் தாக்குதல் 2016’ ன் ஒரு கட்டமாக கடற்படையின் கப்பல் படை பிரிவு, காலாட் பிரிவு, சிறப்பு படகு படை மற்றும் இராணுவ, விமானப்படை பிரிவுகளின் ஒன்றிணைந்த பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர் 10) திகதி திருகோணமலை கடற்படை டொக்யாடில் (கப்பல் பட்டறை) நிறைவு பெற்றது. இப் பயிட்சிகள் செப்டம்பர் 08 முதல் 10 வரை கிழக்கு பிராந்திய கரையோர பிரதேசத்தை தளமாகக் கொண்டு கடல், தள மற்றும் வான் நடவடிக்கைள் மிக வெற்றிகரமாக நடைபெற்றதுடன் பங்குபற்றிய படையினரினருக்கு தங்கள் சிறப்பு நடவடிக்கை திறன்களை மேம்படுத்த மற்றும் போர் தயார் நிலையை பேன மிக உதவியாக அமைந்தது.

திருகோணமலை பிரதேசத்தில் நடத்தப்பட்ட பயிற்சியின் இறுதி கட்ட நடவடிக்கைகளிள் 228 கடற்படை வீரர்கள் உட்பட 308 பேர்கள் பங்கேற்றதுடன் கடற்படை கப்பல்களான ஷக்தி, ரணகஜ, எல் 821 மற்றும் சிறு படகுகள் பயிற்சியின் பல்வேறு கட்டங்களின் போது தமது பங்களிப்பினை வழங்கின.

இறுதிக்கட்ட நடவடிக்கைகளை பார்வையிட கிழக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா உட்பட பெருந்திரளான முப்படை அதிகாரிகளும் சமூகமளித்திருன்தனர்.