கற்பிட்டி புனித சிலுவை வித்தியாலயத்திட்கு தளபாடம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
 

பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கற்பிட்டி புனித சிலுவை வித்தியாலயம், வடமேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல அவர்களின் பணிப்பின் பேரில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்கள், கொழும்பு டொக்யாட் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒரு தொகை தளபாடம் மற்றும் பாடசாலை உபகரணங்களையும், இப்பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி நேற்று (செப்டம்பர் 11) அன்பளிப்பு செய்தனர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளினால் மெருகேறிய இந்நிகழ்விற்கு பத்தலங்குண்டு மீனவ சங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கியது. கடற்படை கப்பல் விஜய வின் கட்டளை அதிகாரி கமாண்டர் அருனசாந்த விஜயவர்த்தன இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் கொழும்பு டொக்யாட் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பத்தலங்குண்டு பிரதேச மக்களும் மாணவர்களும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.