கடற்படையினால் மொனராகலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் சமூக சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொனராகலை கஹகுருல்லன்பெலஸ்ஸ கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் மக்களின் உபயோகத்தித்காக ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அங்கு கடற்படையினர் நிறுவியுள்ளனர். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் ஊவா மாகாண திட்ட இயக்குநர் திரு. ஜகத் புஷ்பகுமார அவர்களால் இன் நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்டம்பர் 11 ம் திகதி (2016) திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக வேண்டப்படுகிறது. இவ்வியந்திரம் அன்றாடம் 10,000 லீட்டர் நீரை சுத்திகரித்து பாடசாலையின் 250 மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட சுற்றுப்புற பிரதேசத்திலுள்ள 537 குடும்பங்களுக்கும் வழங்கும். இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபணுத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 23 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. வணக்கத்துக்குரிய மஹா சங்க உறுப்பினர், தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி, கொமொட்டோர் சுதத் குருகுலசூரிய, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஊர் மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.