கடற்படையினால் போல்பித்திகமையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக போல்பித்திகமை கொருவெவ மஹாநாம மஹா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரமொன்று அங்கு கற்கும் மாணவர்களின் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி நிறுவப்பட்டுள்ளது. நவீன இன்டர்நெட் தொழிநுட்பம் மூலம் இந்நிகழ்வில் பங்கேற்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இன்று இந்நிலையத்தை (செப்டம்பர் 15) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாணவர்களை விளித்த கடற்படை தளபதி அவர்கள் இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை மாத்திரம் பருகுமாரும் வீடு திரும்பும் போது தமது பெற்றோர்களுக்கும் ஒரு போத்தல் நீரையேனும் கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். பயர் ப்ளை சிங்கபூர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடற்படையினால் இவ்வியந்திரம் அமைக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் இதுவரை 45 சிறுநீரக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடற்படையினால் நிறுவப்பட்ட இவ்வியந்திரத்தினால் பாடசாலையில் கற்கும் 850 க்கும் அதிகமான மாணவர்களுக்கும் 250 க்கும் அதிகமான குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீரை பெரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. சிறுநீரக நோய் அதிகமாக காணப்படும் விவசாய சமூகத்தினர் வாழும் பிரதேசங்களில் இதுவரை 24 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மகா சங்க உறுப்பினர்கள், வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல பிரதேச மக்களும் கலந்துக்கொண்டனர்.