8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

கொழும்பு துறைமுகத்திலுள்ள கடற்படை கப்பல், ரங்கள மற்றும் வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனு ஆகியவற்றின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் கந்தானை பகுதியில் வைத்து நேற்று (செப்டம்பர் 15) கைதுசெய்யப்பட்டார். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் படி மஹாபாகே பொலிசாரின் உதவியுடன் கடற்படையினர் இச்சோதனையை மேற்கொண்டனர்.

சந்தேக நபரும் கஞ்சாவும் மஹாபாகே பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.