கடற்படையினால் மரண இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாய் கையளிப்பு
 

கடற்படையின் வைத்திய காப்புறுதி திட்டமான ‘நவிறு சவிய’ வின் கீழ் மரண இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபா, இலங்கை கடற்படையின் காலம்சென்ற பொரியியல் பிரிவு வீரர் ஜிஎஸ்எஸ் அபேவீர வின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான காசோலை இன்று (செப்டம்பர் 16) வெலிகமையில் அவரின் வீட்டில் வைத்து கையளிக்கப்பட்டதுடன் கடற்படையின் இரங்கலையும் அவரின் குடும்பத்திற்கு எத்திவைக்கப்பட்டது.

‘நவிறு சவிய’ வைத்திய காப்புறுதி திட்டம் கடற்படை தளபதியின் நேரடி மேட்பார்வையின் கீழுள்ள ஒரு ஒரு நிதியமாகும். இத்திட்டத்தின் கீழ் அதன் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மரணம், பாரிய நோய், பூரண மற்றும் பகுதி அங்கவீனம், சிறு நோய்கள், சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக நிதியுதவி வழங்கப்படும்.