சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் இன்று (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் ஒரு கண்ணாடியிலை படகும் 4 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவரும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.