‘நீர்க்காக தாக்குதல்’ கொக்கிளாய் கடற்கரையில் நிறைவு
 

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த ஒன்றிணைந்த களமுறைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்’, திருகோணமலை, கொக்கிளாய் கடற்கரையில் இன்று (செப்டம்பர் 20) நிறைவுபெற்றது. ஏழாவது தடவையாக நடத்தப்படும் இவ்விராணுவ பயிற்சி நடவடிக்கைகள், பங்களாதேஷ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, நேபாலம், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 58 இராணுவ அதிகாரிகரிகளினதும் 2,500 இலங்கை இராணுவ, 638 கடற்படை மற்றும் 506 விமானப்படை அதிகாரிகளின் பங்குபற்றலுடனும் நடைபெற்றது.

இறுதி தினமன்று ரோந்து நடவடிக்கை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் தந்திரோபாயங்கள், சோதனைகள், பதுங்கியிருந்து தாக்குதல்கள், துப்பாக்கி சூடு மற்றும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போன்ற இராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. இலங்கை கடற்படையின் கப்பல்கள், துரித தாக்குதல் மற்றும் சிறிய படகுகள் பயிற்சியின் பல்வேறு கட்டங்களின் போது தமது பங்களிப்பினை அளித்தன. இலங்கை இராணுவத்தின் வலிமையை வெளிக்காட்டும் விதத்தில் 'நீர்க்காக தாக்குதல்’ இராணுவ பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இராணுவ அதிகாரிகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா, வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் பலரும் இறுதி தின நிகழ்வை காண சமூகமளித்திருந்தனர்.