சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர் கடற்படையினால் கைது
 

வடமத்திய கடட்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்கலம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் நேற்று (செப்டம்பர் 20) கைது செய்யப்பட்டார்.

அவருடன் 6 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரும் பொருள்களும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.