சர்வதேச கடற்பல கருத்தரங்கில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் நேற்று (செப்டம்பர் 21) கலந்துக்கொண்டார்.

‘வலுவான கடல்சார் பங்குதாரர்கள்' எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இவ்வருட கருத்தரங்கு சர்வதேச கடற்பலம் சம்பந்தமான கருத்தரங்குகளின் முக்கியமான மாநாடாக கருதப்படுகிறதுடன் 110 க்கும் அதிகமான கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படை தளபதிகளிடையே கருத்துப்பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முகமாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ள தளமாகவும் அமைந்துள்ளது.

மேலும் இம்மாநாடு, கலந்துக் கொள்ளும் கடற்படை தலைமை பிரதிநிதிகளுக்கு பிராந்திய மற்றும் உலகளாவிய கடல்வழிப் பாதுகாப்பு சம்பந்தமான கருத்துக்களை பரிமாரிக்கொள்வதற்கு சிறந்த தளமாக அமையும்.கடற்படை பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் தர்மேன்திர வேத்தேவ மற்றும் கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் உதவியாளர், கெப்டன் புத்திக லியனகம ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்டுள்ளனர். இம்மாநாடு 23ம் (செப்டம்பர்) திகதி நிறைவுபெறவுள்ளது.

மாநாட்டின் முதல் நாள் செயற்பாடுகளின் பின் கடற்படை தளபதி, இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் முஹம்மத் சகாஉல்லாஹ், அமெரிக்க 5ம் கப்பல் படையணியின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் எம் டொநெகன் மற்றும் பல சிரேஷ்ட கடற்படை பிரதாணிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேட்கொண்டர். இச்ந்தர்ப்பங்களின் போது நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது

 

 

 

 

 

பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் முஹம்மத் சகாஉல்லாஹ் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது

 

 

 

 

 

அமெரிக்க 5ம் கப்பல் படையணியின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் எம் டொநெகன் உடனான சந்திப்பின் போது