சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 21) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகளும் 2 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே தினம், கொக்கிளாய் கடல் பகுதியில் தடுக்கப்பட்ட வலைகளைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைதிவு, கடற்படை கப்பல் கோதாபய வின் வீரர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 3 படகுகளும் 2 தடுக்கப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும் பொருள்களும் முல்லைத்தீவு பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.