‘பிரினிவன் மங்கல்ய நிகழ்ச்சியில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பாராட்டு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் பணிப்பிட்கமைய கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தாமரை தடாகம் அரங்கில், பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையில் நடந்த, இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரினிவன் மங்கல்ய வில் பங்கேற்றிய கலைஞர்கள் லைட் ஹவுஸ் கெலி யில் நேற்று மாலை (செப்டம்பர் 22) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கௌரவிக்கப்பட்டார்கள். கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்வின் போது அக்கலைஞர்களின் சேவையை பாராட்டி பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்குகொண்ட பாடகர்களுக்கும் வாத்தியக் கலைஞர்களுக்கும் பாராட்டு பத்திரம் வழங்கி வைப்பதில் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, பணிப்பாளர் நாயகம் இலத்திரணவியல் ரியர் அட்மிரல் வசந்த பெர்னாந்து, பணிப்பாளர் நாயகம் கொள்முதல் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் சந்தன குலசேகர, பதில் பணிப்பாளர் நாயகம் கட்டுமானப் பொறியியல் ரியர் அட்மிரல் சுசில் சேனாதீர, திருமதி காயத்ரி கேமதாச, திருமதி அனோஜா வீரசிங்ஹ, பணிப்பாளர் இசை கொமொடோர் ஜூட் பீரிஸ், கப்டன் டேமியன் பெர்னாந்து ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் பல கடற்படை உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.