சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் முன்று வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று (செப்டம்பர் 22) கைதுசெய்யப்பட்டார்கள். இதற்கமைய கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்களால் கொக்குதுடுவை கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களுடன் ஒரு படகும், ஒரு சுளியோடி முகமூடியும் தடுக்கப்பட்ட மீன்பிடி வலையொன்றும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருட்களும் முல்லைத்தீவு பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நிலாவெளி, கடற்படை கப்பல் விஜபா வின் வீரர்கள் புறா தீவு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்களை கைதுசெய்தனர். அவர்களுடன் ஒரு படகும், ஒரு சோடி சுழியோடி காலணிகளும், ஒரு சுழியோடி முகமூடியும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருட்களும் திருகோணமலை வன அலுவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே தினம், வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் புளிப்பிட்டி கலப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 6 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுடன் 3 படகுகளும் 3 தனியிலை வலைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருட்களும் புத்தளம் பிரதி கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..