கடற்படை அணி படகோட்ட போட்டியில் வெற்றி
 

இலங்கை கடற்படையின் படகோட்ட அணி, கொழும்பு மோட்டார் படகு கழகத்தினால் கடந்த 18ம் திகதி (செப்டம்பர்) பொல்கொடை குளத்தில் நடத்தப்பட்ட படகோட்ட போட்டியில் பல வெற்றிகளை பதிவு செய்தது.

பல படகோட்ட கலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்ற 96 போட்டியாளர்களில் கடற்படை அணியின் வீரர்கள் 1ம், 2ம், 3ம் மற்றும் 4ம் இடங்களையும் வெற்றி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.