கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 77.5 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
 

கிடைக்கப்பெற்ற தகவழ் ஒன்றிற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள் முல்லைத்தீவு பொலிசாருடன் இணைந்து புதுக்குடியிருப்பு, அம்பலன்பொக்கனை கரையூர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 77.5 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றினர். கடற்படை வீரர்களின் வருகையை கண்ட சந்தேக நபர்கள் கஞ்சாவை கைவிட்டுவிட்டு தப்பியோடி உள்ளர்கள்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா முல்லைத்தீவு பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.