எப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

மற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர். இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (செப்டம்பர் 26) வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக எப்பாவலை குளக்கட்டு பாதிக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேச மக்களுக்கு பெரும் குடி நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனையறிந்த கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் பணிப்பிட்கமைய ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் தூய குடிநீரை வழங்குமுகமாக இன் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம் அப்பாடசாலையின் 4,000க்கும் அதிகமான மாணவர்களும் அப்பிரதேசத்தின் 300க்கும் அதிகமான குடும்பங்களுக்கும் சுத்தமான குடி நீரை பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் மகா சங்க உறுப்பினர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல பிரதேசவாசிகளும் கலந்துக்கொண்டனர்

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி நாடளாவ ரீதியில் 27 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 10,000 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்களும் 16,000 அதிகமான குடும்பங்களும் நன்மையடைந்துள்ளன. மேலும் இது போன்று 4 இயந்திரங்கள் அனுராதபுரம் பிக்கு பல்கலைகழகத்தில் நாளை (செப்டம்பர் 27) மற்றும் யாழ்பாணம் பல்கலைகழகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 02ம் திகதியும் நிறுவப்பட உள்ளன