கடற்படை தளபதி அமெரிக்க பெண்டகன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க பெண்டகனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை திங்களன்று (செப்டம்பர் 26) சந்தித்தார். ஆசியாவுக்கான அரசியல் இராணுவ விவகாரங்கள் துணை இயக்குனர், விமானப்படை மேஜர் ஜெனரல் ஜான் டி குவிண்டஸ், வியூகம் மற்றும் அமெரிக்க கடற்படை திட்டங்கள் பிரிவு இயக்குனர், பிரிகேடியர் ஜெனரல் சிஜே மேஹோனி, செயல்பாடுகள், கடற்படை நடவடிக்கை திட்டங்கள் மற்றும் மூலோபாயம், துணை தலைவர் வைஸ் அட்மிரல் ஜான் சி அகீளினோ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் பயிற்சி, அனுபவப் பகிர்வு, கப்பல் வருகைகள், இலங்கை கடற்படையின் கடல் பட்டாலியன் உருவாக்கம் மற்றும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேட்கொள்ளப்பட்டன.

மேலும் கடடப்டை தளபதி அமெரிக்க இராஜாங்க திணைக்கள மற்றும் கரையோர பாதுகாப்பு படை அதிகாரிகளையும் செவ்வாயன்று (செப்டம்பர் 27) சந்திக்க உள்ளார். இலங்கையின் தூதுக்குழுவுடன் லெப்டினன்ட் ஜேகப் எப் இங்லிஷ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் தர்மேந்திர வேத்தேவ, கடற்படை தளபதியின் பிரத்தியோக செயலாளர் கேப்டன் புத்திக்க லியனகமகே ஆகியோரும் கடற்படை தளபதியின் அமெரிக்க விஜயத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.