கடற்படை தளபதி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நிஷா பிஸ்வாலுடன் சந்திப்பு
 

அமெரிக்கவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்கள் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர், நிஷா பிஸ்வாலை செவ்வாயன்று (செப்டம்பர் 27) சந்தித்து கலந்துரையாடினார்.

கடற்படை தளபதி, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் மன்ப்ரீத் எஸ் ஆனந்த் மற்றும் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவி செயலாளர் வில்லியம் இ டொட் அவர்களையும் இராஜங்க செயலகத்தில் வைத்து சந்தித்தார்.

அதன் பின்னர் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையின் கையகப்படுத்தல் உதவி கமாண்டன்ட் மற்றும் தலைமை கையகப்படுத்துதல் அதிகாரி ரியர் அட்மிரல் ஜோசெப் எம் வொஜ்வொடிச் அவர்களை வாஷிங்டனினுள்ள கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் தர்மேன்திர வேத்தேவ, இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்க, கடற்படை தளபதியின் பிரத்தியேக செயலாளர் கப்டன் புத்திக லியனகமகே மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜேகப் எப் இங்லிஷ் ஆகியோரும் இச்சந்திப்புகளின் போது சமூகமளித்திருந்தனர்.