அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்துவைப்பு
 

கடற்படை தளபதியின் பணிப்பிட்கமைய நாடலாவ ரீதியில் கடற்படையினர் பல்வேறு சமுக நலத்திட்டங்களை பொது நலன் கருதி மேட்கொண்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO Plant) இன்று (செப்டம்பர் 29) திறந்து வைக்கப்பட்டன. இவ்விறு இயந்திரங்களும் அப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பெரும் 450 பிக்குமாருக்கு தேவையான நீரை சுத்திகரித்து வழங்கக் கூடியன.

பல்கலைக்கழகத்தின் பழைய மற்றும் புதிய கட்டிடத்தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இவ்விரு இயந்திரங்களுக்கான நிதி, சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியினால் வழங்கப்பட்டதுடன் அதன் நிர்மாணிப்பு பணிகள் கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் மேட்கொள்ளப்பட்டது. நாட்டில் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களில் இதுவரை 29 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு நிர்மாணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.