நிகழ்வு-செய்தி

சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (செப்டம்பர் 29) இலங்கையை வந்தடைந்த பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சொமுத்ரா ஜோய் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளான கப்டன் கம்ருல் ஹக் சவ்த்ரி மற்றும் கப்டன் எம் ஹுமாயன் கபீர் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 30) சந்தித்தனர்.

30 Sep 2016

கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து நபர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், மன்னார் பொலிசாருடன் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மன்னார் பிரதேசத்தில் வைத்து 4 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்ற செய்வதில் ஈடுபட்டிருந்த 4 பேர்களை நேற்று (செப்டம்பர் 29) கைது செய்தனர்.

30 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
 

தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட தங்காலை, கடற்படை கப்பல் ருஹுனு வின் வீரர்கள் தங்காலை பொலிசாருடன் இணைந்து நாகுளுகமுவை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 3 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு மீனவரை நேற்று ( செப்டம்பர் 29) கைது செய்தனர்.

30 Sep 2016

பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சகிதம் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி மேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட உஸ்வெடகைய்யாவை, கடற்படை கப்பல் களணி யின் வீரர்கள், மருந்துகள் மற்றும் உணவு ஊடாடல்கள் வாரியம் மற்றும் கம்பஹா பொலிசாருடன் இனைந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (டிரமடோல்) அடங்கிய 10 பெட்டிகளை வைத்திருந்த ஒரு நபரை நேற்று (29 செப்டம்பர்) சீதூவையில் கைது செய்தனர்.

30 Sep 2016