சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

‍நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (செப்டம்பர் 29) இலங்கையை வந்தடைந்த பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சொமுத்ரா ஜோய் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளான கப்டன் கம்ருல் ஹக் சவ்த்ரி மற்றும் கப்டன் எம் ஹுமாயன் கபீர் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 30) சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பங்களாதேச துதகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் அஸ்லம் பர்வேஸ் அவர்களும் கப்பலில் வந்த பயிற்சி அதிகாரிகள் குழுவொன்றும் இச்சந்திப்பின் போது கலந்துக் கொண்டனர்.