கடற்படையினரால் மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கலென்பிந்துனுவெவவில் திறந்து வைப்பு

சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக கலென்பிந்துனுவெவ, உபுல்தேனிய, ஸ்ரீ உத்பலராமய விகாரையில் பொதுமக்கள் பாவனைக்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று இன்று (ஒக்டோபர்.01) திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இப்பிரதேசத்தில் வசிக்கும் 300 குடும்பங்கள் மற்றும் உபுல்தெனிய வித்தியாலத்தில் கல்வி பயிலும் 350ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீரைப் பெற முடியும்.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறன் மூலம் நாடு முழுவதிலும் சுமார் 30ற்கு மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. சுத்தமான குடிநீரின்மை காரணமாக சிறுநீரக கோளாறுகளை எதிர் கொள்ளும் விவசாய சமூகத்தினருக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் இச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது