நைஜீரிய கடற்படை கப்பல் ‘யுனிட்டி’ இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நைஜீரிய கடற்படை கப்பல் ‘யுனிட்டி’, இன்று காலை (அக்டோபர் 05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த நைஜீரிய கப்பளுக்கு இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டது. இம்மாதம் 07ம் திகதிவரை இக்கப்பல் இலங்கையில் தங்கியிருப்பதோடு அதன் பணிக்குழுவினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர்.