சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களால் பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 6 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 05) கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களுடன் 2 படகுகள், 22 ஒட்சிசன் சிலிண்டர்கள், 3 சோடி சுளியோடி காலணிகள், 4 சோடி சுளியோடி முகமூடிகள், 2 ஜிபிஎஸ் (GPS) கருவிகள் உட்பட 330 கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருட்களும் பருத்தித்துறை கடற்றொழில் அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.