இரு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சேவையிலிருந்து பிரியாவிடை
 

பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் ஏறிக் ஜயாகொடி மற்றும் கொடி அதிகாரி கப்பல் பிரிவு, ரியர் அட்மிரல் தயானந்த நானாயக்கார இன்றுடன் (அக்டோபர் 06) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள். அவர்களிருவரும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை இன்று சந்தித்த வேளையில் அவர்களிருவருக்கும் கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் இரு சிரஷ்ட அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர். 1982 ம் ஆண்டு, 11ஆம் கடெட் அதிகாரிகள் உள்லெடுப்பில் கடற்படையில் இனைந்த இவ்விருவரும் தம் நீண்ட சேவையின் போது கடற்படையின் பல்வேறு கப்பல்களிலும் வேறு ஸ்தாபனங்களிலும் சேவையாற்றியுள்ளனர். அவர்களது சேவை காலத்தின் போது கடற்படையின் நலனுக்காக தமது அனுபவத்தையும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகள் மூலம் பெற்ற அறிவையும் அர்பணித்து சேவையாற்றினர். நாட்டிட்கும் குறிப்பாக கடற்படைக்கும் அவர்கள் ஆற்றிய சேவை கடற்படை சரித்திரத்தில் பதிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 













The retirement of Rear Admiral Eric Jayakody

 

 

 

 

 






























The retirement of Rear Admiral Dayananda Nanayakkara