வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தில் டெங்கு மற்றும் புற்றுநோய் தவிர்ப்பு நிகழ்ச்சி

வடக்கு கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் பணிப்பில், கடற்படை வீரர்கள் பொது சுகாதார பரிசோதகர்களுடன் இனைந்து ஊர்காவற்றுரை மற்றும் வேலணை பிரதேசங்களில் கடந்த செப்டம்பர் (2016) 28ம் மற்றும் 29ம் தினங்களில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வைத்திய அதிகாரிகளுக்கு உதவியளித்தனர். இந்நிகழ்ச்சிகளின் போது அவர்கள் 1,897 கும் அதிமான வீடுகளுக்கு விஜயம் செய்து டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டினர்.

மேலும் கடற்படை கப்பல் எலார மற்றும் உத்தர வினால், தேசிய புற்று நோய் தடுப்பு சங்கத்தின் கண்டி பிரிவுடன் இனைந்து கடற்படை வீரர்களுக்கான ஒரு புற்று நோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சியின்போது, கடற்படை வீரர்களுக்கு புற்றுநோய் பற்றியும் அதன் அறிகுறிகள், அவற்றை அடையாளம் கானல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தமான அறிவூட்டல் கொடுக்கப்பட்டது.