கடற்படையின் சிறு வேக படகுகளுக்கு ‘செட்ரிக்’ என பெயர் சூட்டல்

கடற்படையின் சிறப்பு படகு பிரிவின் (SBS) இணை நிறுவனறான காலம்சென்ற கொமாண்டர் (தொண்டர் கடற்படை) செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் NVX 5068 அவர்களின் 70ம் பிறந்த நாலையொட்டி (அக்டோபர் 05, 2016) அவரை கௌரவப்படுத்தும் முகமாக இலங்கை கடற்படையினால் அதன் சிறு வேக படகுகள் ‘செட்ரிக்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடற்படையின் சிறப்பு படகு பிரிவு (SBS), 1993ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் தற்போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும்  கொமாண்டர் செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் அவர்கள் இனைந்து ராயல் கடற்படையின் சிறப்பு படகு படை மற்றும் அமெரிக்க கடற்படை சீல்ஸ் சிறப்பு படகு பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.

கொமாண்டர் மார்ட்டென்ஸ்டைன் அவர்கள் தனது வேகப் படகு மற்றும் அவுட்போர்டு இயந்திரங்கள் தொடர்பான நிபுணத்துவத்தை உபயோகித்து இந்த 16 அடி நீளமான சிறு வேக படகுகளை வடிவமைத்ததோடு, யாழ்ப்பாணம் கிலாலி கலப்பில் புலிகலின் சிறு படகுகளுக் கெதிராக சிறப்பு படகு பிரிவினால் அதிகளவில் உபயோகிக்கப்பட்டது. இப்படகளில் இரண்டு புது வகையான துப்பாக்கிகள்,  40 மிமீ தானியங்கி குண்டு வீசிகள் (AGL) மற்றும் 7.62 X 51 மிமீ பல்நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள் (MPMG) பொருத்தப்பட்டன.   அதன் பலனாக அதிக ஆயுத பலம், செலுத்தத்தன்மை மற்றும் வேகம் ஆகியவற்றுடன் சிறப்பு பயிற்சியும்  உத்வேகமும் பெற்ற சிறப்பு படகு படை வீரர்கள் துணிச்சல் வெற்றிகரமாக கலப்பு மோதல்களில் ஈடுபட்டு கடற்படைக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர்.

காலம் சென்ற கொமாண்டர் மார்ட்டென்ஸ்டைன் 1995ள் இப்பிரிவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இதுவரை கடற்படை தொண்டர் படையணி உறுப்பினர் ஒருவார் விசேட படையணி ஒன்றின் தலைமையை ஏற்ற முதலாவது அதிகாரியானார். 1996 ஜனவரி 22 ம் திகதி அவர் சென்ற உலங்கு வானூர்தி எதிரி தாக்குதளுக்குள்ளாகி வெத்திலைக்கேணி கடல் பிரதேசத்தில் விழுந்ததில் அவரும் மற்றுமொரு சிறப்பு படகு பிரிவின் அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் துசார பளிஹேனவும் காணாமல் போனோராக கருதப்பட்டனர். கொமாண்டர் மார்ட்டென்ஸ்டைன் ஆணையிரவு முகாமிலிருந்த சிறப்பு படகு பிரிவின் துருப்பினரை ஆய்வு செய்துவிட்டு பலாலியிலிருந்து திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடற்படையின் முதலாம் சிறு வேக படகு உற்பத்திக்காக அவரின் மகத்தான பங்களிப்பினையும் யுத்தத்தில் அவரின் வீரத்தினையும் நினைவுகூறுமுகமாக அவரின் 70ம் பிறந்த தினத்தன்று இச்சிறு வேக படகுகளுக்கு ‘செட்ரிக்’ என கடற்படையினால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.   தகுதி பெற்ற விமானியான அவரின் மகன் ஜேசன் மார்ட்டென்ஸ்டைன்  தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி, இலங்கை விமானப்படையில் பறக்கும் அதிகாரியாக ஏஎன் 32 ரக விமான ஓட்டியாக 1994 செப்டம்பர் 06 ம் திகதி இனைந்து பின் 1995 செப்டம்பர் 13ம் திகதி யுத்தத்தில் உயிரிழந்தார். இலங்கை தேசத்திற்காக உயிர் நீத்த தந்தை மகன் பட்டியலில் கொமாண்டர் செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் மற்றும்  பறக்கும் அதிகாரி ஜேசன் மார்ட்டென்ஸ்டைன்  ஆகியோர் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளனர்.