கடற்படை தளபதி கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியில் பிரதம அதிதியாக பங்கேற்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் வெலிசறை ரக்பி மைதானத்தில் அக்டோபர் 7ஆம் மற்றும் 8 தினங்களில் நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியின் இறுதி போட்டியின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இறுதி போட்டியின் போது கிழக்கு கடற்படை கட்டளை அணி பயிற்சி கட்டளை அணியை தோற்கடித்து சம்பியன்ஷிப் விருதை சுவீகரித்துக்கொண்டது. பயிற்சி கட்டளை அணி இரண்டாம் இடத்தை பெற்றதோடு மேதகு கட்டளை அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. கப்பல் படை அணி ப்லேட் சம்பியன்ஷிப் விருதை பெற்றது. போல் சம்பியன்ஷிப் விருதை தென்கிழக்கு கட்டளை அணி பெற்றுக்கொண்டது. பெண்கள் பிரிவில் பயிற்சி கட்டளை அணி சம்பியன்ஷிப் விருதை பெற்றுக் கொண்டதுடன் மேற்கு கட்டளை அணி இரண்டாம் இடத்தையும், வடமத்திய கட்டளை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

போட்டித் தொடரின் சிறந்த ரக்பி வீரருக்கான விருது கடற்படை பயிற்சி கட்டளை அணியின் லெப்டினன்ட் RPNWP ராஜபக்ச வும் சிறந்த வீராங்கனைக்கான விருது பெண் இடைநிலை அதிகாரி OSS தன்நோருவ வும் பெற்றுக் கொண்டனர்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்திட்கு கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, பிரதி கடற்படை பிரதானி மற்றும் தொண்டர் படையணியின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசைரொ, மேற்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா உட்பட பல உயரதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் போட்டியாளர்களுடன் கடற்படை தளபதி புகைப்படம் எடுக்கவும் கலந்துக்கொண்டார்.