ஜப்பானிய ‘கஷிமா’ கப்பலில் விருந்துபசாரம்
 

ஐந்து நாள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘காசிமா’, ‘செடோயுகி’ மற்றும் ‘அசாகிரி’ ஆகியன அக்டோபர் 07 ம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தன. அன்நாட்டவர்களின் உயரிய விருந்தோம்பளை வெளிப்படுத்துமுகமாக இன்று மதியம் (அக்டோபர் 09) ‘கஷிமா’ கப்பலில் ஒரு விருந்துபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இவ்வைபவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகுனாமா, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஏயார் சீப் மாஷல் கோளித குணதிலக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, மேற்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா, பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் தர்மேந்திர வேத்தேவ உட்பட பல உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

வருகை தந்த பிரமுகர்களுக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்ட பின் ஜப்பானிய பயிற்சி பிரிவின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஹிடேடோஷி இவசாகி மற்றும் மூன்று கப்பல்களின் கட்டளைத் தளபதிகளிலாலும் வரேவேட்கப்பட்டார்கள். பின்பு நடந்த கலந்துரையாடலின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. வருகை தந்த விருந்தினர்களுக்கு ஜப்பானிய அதிகாரிகளால் மதியபோசன விருந்துபசாரம் ஒன்றும் வழங்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் கடற்படை தளபதி மூன்று கப்பலில் பயிற்சி பெரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வை நினைவுகூருமுகமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.