மூன்று ஜப்பான் கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு கடந்த 7ம் திகதி இலங்கையை வந்தடைந்த ஜப்பான் கடற்சார் சுய பாதுகாப்பு படையிள் மூன்று கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்

ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்பு படை பயிற்சி பிரிவு தளபதி ரியர் அட்மிரல் ஹிடேடொஷி இவசாகி அவர்கள்,கஷீமா,செடொயுகி,மற்றும் அசகிரி கப்பல்களில் கட்டளை அதிகாரிகள் ஆகிய கேப்டன் ஜோசுகி நகபுரா,கொமான்டர் கென் சகாய், கொமான்டர் ஹிரோயூகி லெராஒகி ஆகும் கடற்படை அதிகாரிகள் கடற்படை தளபதி சந்தித்து நட்பு வெளியான பேசினார்கள்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இலங்கைல் ஜப்பான் பாதுகாப்பு ஆலோசனைக்குழு லெப்டினென்ட் அட்சுகிரோ மொரேரொ அவர்களும் கப்பலில் வந்த பயிற்சி அதிகாரிகள் குழுவொன்றும் இச்சந்திப்பின் போது கலந்துக் கொண்டனர்.